பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTsLL LLLLLL Ly TLy LLLLLL LLLLLLLLLLLSK SLLLLLS S00

இளமை கொண்டிருக்கிறோம். கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல் தான் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்கு இருக்கிறது. வந்தே மாதரம்.

இதைக் குறிப்பிட்டு பாரதியார் உணர்ச்சி பொங்கத் தனது கட்டுரையில் மேலும் தொடருகிறார்.

“இதுவே உயிரின் ஒளி. ஹறிந்து ஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்.

'இதுதான் ஜீவ சக்தியின் சாந்தி வசனம். இந்து தர்மம் ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக் கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம் உபாத்தியாயராகலாம்.

“ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சி செய்தல் எளிதென்பது றுநீமான் வளலாவின் சரிதையிலே நன்கு விளங்கும். நம்முடைய சர்த்திர தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்து கொள்வதால் அவர்களுக்கு விளையக் கூடிய நன்மையோ மிக மிகப் பெரியது” என்று பாரதி எழுதுகிறார். அவர் மேலும் மேற்கோள் காட்டுகிறார்.

பூரி ஜகதீஷ் சந்திரவஸ் சொல்லுகிறார் “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு போய் சேர்ப்பதாகிய இந்த வெறிக்கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தருமம் வேண்டும். அதாவது நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால் ஆத்ம தியாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச்