பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT LLLLL TCLy TTT LLLLLLTTTTyLSK LLyLLLS SL0

9. வறுமையின் காரணமும் விளைவும் தீர்வும் வழியும்

வறுமை காரணமாக சமுதாயத்தில் சில முரண்பாடுகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வு காண்பதற்கு பாரதம் அன்பு வழியைக் காட்டியிருக்கிறது. இதைப் பாரதி மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

மேலை நாடுகளில் சில தத்துவங்களும் செயல்முறைகளும் உள்நாட்டுச் சண்டைகளுக்கும் உலகப் போர்களுக்கும் காரணமாகின்றன. இந்தச் சண்டைகளைத் தவிர்த்து உலகம் அமைதியாக வாழ பாரதம் அன்பு வழியைக் காட்டியிருக்கிறது. அரசியலிலும் அன்பு வழியே சிறந்தது என்பது பாரதியின்

வாசகமாகும்.

ஒருவருக்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த வாதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும் போதே முன் பின் தெரியாத மனிதர் கூட ஒருவருக்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி அன்பை மூலாதாரமாக்க வேண்டும்” என்று பாரதி கூறுகிறார்.

“முதலாவது சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர்தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்து விட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய் தோப்பு, துரவு, சுரங்கம் நதி, அருவி, குப்பை, செத்தை, தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக் கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக்