பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTT LSLTT LLL TT LLLL TTT LLLLLLTTLLLLSSK SLLLLS 9 3

தர்மத்தை ஆதரிக்க வேண்டும். இதில் பரமார்த்தத்தை அறிய முயல வேண்டும். சத்தியம் என்பது வாய்மை. தர்மம் என்பது கடமை. பரமார்த்தம் என்பது உண்மை நிலை (நிஜம்) இதற்கு மேலும் இந்த சொற்களுக்கு விரிவான பொருள் இருக்கிறது. இப்போது இந்தப் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு அதற்கான கிளர்ச்சிகளை போராட்டங்களை, முயற்சிகளை மேற் கொள்வதற்கு சுய முயற்சியும் சுய பயிற்சியும் கொண்டு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் ஏராளமான செயல் வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் சிறந்த மனிதர்களாகப் பயிற்சி பெற வேண்டும்.

இதை மனதில் கொண்டே பாரதி சத்தியம் பேசி, தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலும் மனிதர்கள் பலரும் தேவை என்பதை பாரதி கூறுகிறார்.

இப்போது நாடு விடுதலை பெற்ற பிறகு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு இன்னும் அதிகமான அளவில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பல லட்சக் கணக்கிலும் இன்னும் கோடிக் கணக்கிலும் சத்தியம் பேசி, தர்மத்தை ஆதரித்து பரமார்த்தத்தை அறிய முயலும் எண்ணற்ற செயல் வீரர்கள் தேவைப் படுகிறார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் போது ஒரே நோக்கத்தில் ஒரே குறிக்கோளில் ஒரே கட்டுப்பாட்டுடன் கூடிய விர குணம்மிக்க செயல் வீரர்கள் தேவைப் பட்டனர். அத்தகைய ஒழுக்கமும், கட்டுப்பாடும், தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட இளைஞர்களை முன் வரும்படி மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் குறிக்கோள்களாக முன் நிற்கின்றன. வளர்ச்சியும்