பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(22) பாரதியின் உரைநடைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. "சிதம்பரம்" எதுேம் தலைப்பிலானக் கட்டுரையில், "காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து பூஜை முடித்து , பழம் கின்று, பால் குடித்து , வெற்றிலை போட்டு மேலைத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வாம்ை தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங்கொண்டு முதலையைப் போதும், ஏரிக்கரையைப் போதும் நானாவிதமாகப் படுத்துக் கிடக்கிறது. எதிர் விட்டில் தடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டில் இருந்து சக்கித ஒசை வருகிறது. வீதியிலிருந்து குழத்தைகளின் சப்தம் கேட்கிறது . வண்டிச் சப்தம், பக்கத்து விட்டு வாசலில் விறகு பிக்கிற சப்தம், நாகுே شایعه را به காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளை , புறாக்களின் ஒசை, வாசலிலே காவடி கொண்டு போகும் மயோசை. தொலையிலிருந்து வரும் கோவிற் சங்கி நாதe , தெருவிலே சேவலி கொக்காப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரிகளின் பேச்சொன், அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், "நாராயணா, கோபாலா என்று ஒரு பச்சைக் காரனின் சப்தம், நாய் குரைக்கும் சப்தம், கதவுகரி அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவம் உறஅக்கும் என்று தொண்டையை லேசாக்கி இருமித்திருத்திக் கொள்ளும் சப்தம், தொலைவிலே காய்கறி விற்பவன் சப்தம், அரிசி, அரிசி: எதுே அரிசி விற்றுக் கொக்கு போகிற ஒலி, இப்படிப் பலவிதமான ஒன்கள் ஒன்றல் பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகிறன . இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்திக் மஉறா மெளனத்தைச் சுருதியாக்கி எல் மனம் அபேவித்துக் கொண்டிருக்கிறது" என்று எழுதுகிறார். இதில் சிறிய சிறிய வாக்கியங்கள், சேர்ந்த பெரிய வாக்கியங்கள், பொருள் பொதிந்த வர்கனைகள், எளிய நடை. ஓசை, சப்தம், குரல், ஒலி, நாதம், போன்ற இணையான பொருள் கொண்ட பல சொற்கள் முதலிய வற்றைக் காண முடிகிறது. தற்கால தமிழ் உரை நடையின் தொடக்கமாக பாரதியில் இந்த உரை நடையை எடுத்துக் கொள்ளலாம். இந்த மரபு சிறந்த வழி காட்டுதலாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. . . . . 28. . . . .