பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் கூறி வருகிறார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியர்கள் தங்கள் உரிமைகளுக்காக கோரிக்கை மனுக்கள் கொடுக்க இந்திய தேசீய காங்கிரஸ் அமைப்பு உருவாயிற்று. அதன் தொடர்ச்சியாக பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்திலும் அந்த இந்திய தேசீயக் காங்கிரஸ் பங்கு கொண்டு, இந்திய தேசீயத்தை வளர்த்தது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸில் பல பிரிவுகளும் போக்குகளும் இருந்தன. இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையில் பெரும்பாலும் ஆங்கில சிந்தனையாளர்களே அதிகமாக இருந்தார்கள். எனவே காங்கிரஸ் தேசீயத்தின் வடிவம் பெரும்பாலும் ஐரோப்பிய சிந்தனை வடிவத்திலேயே அமைந்திருந்தது. இந்தக் காலத்தில் பாரதியின் தேசிய சிந்தனை வடிவம் முற்றிலும் மாறுபட்ட இந்திய பாரம்பரிய வடிவில் வெளிப்பட்டது. அந்த விவரங்கள் இந்த நூலில் கூறப் பட்டிருக்கின்றன. இந்திய-கதந்திரப் போராட்டம் வளர்ச்சி பெற்று புதிய கட்டங்களை அடைந்த போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆங்கிலேய அரசியல் நிர்வாகிகள் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் இந்திய தேசிய இயக்கத்தை மத அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் பிளவு படுத்த முயற்சித்தார்கள். 1916-ம் ஆண்டில் தோன்றிய அகில இந்திய முஸ்லிம் லீக் 1940-ம் ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்களிடம் செல்வாக்கு பெற்று இந்திய தேசீய காங்கிரஸ் கூறுவது “இந்து” தேசீயம் என்றும் முஸ்லிம்களுக்கு அந்த தேசீயம் ஒத்துப் போகாது என்றும், முஸ்லிம் தேசீயம் தனியானது என்றும் பேசி, இரு தேசீயங்களின் அடிப்படையில் நாடு சுதந்திரம் அடைந்த போது, நாட்டின் பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் அமைந்தது என்பது வரலாற்று விவரமாகும். அது பற்றியும் இந்த நூலில் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. முஸ்லிம் தேசீயம் என்னும் கொள்கையின் படி பாகிஸ்தான் பிரிந்து சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் முஸ்லிம் தேசீயம் உடைந்து, மொழிவழி அடிப்படையில் வங்க தேசீயம் என்று தோன்றி, பாகிஸ்தானிலிருந்து கிழக்கு