பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் 14 | கருத்துக்களும் சரி தோல்வியடைந்து விட்டன. செயலிழந்து விட்டன. அந்தக் கட்சிகளும் தங்கள் தனித்தன்மைகளை இழந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் என்னும் அடையாளத்தையும் இழந்து விட்டன. இதர சிறிய சில கட்சிகளைப் போலவே அவைகளும் செயல் பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்திலும் மாநில ஆட்சிப் பொருப்பில் இருந்து வரும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் தேசீயக் கருத்துக்களை இன்னதென்று தெளிவாகச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே இத்தகைய வரலாற்று அனுபவத்தில் பார்க்கும் போது பாரத நாட்டின் உண்மையான தேசீயம் என்பது அதன் கலாச்சார தேசியமேயாகும். அதுவே சரியானதுமாகும் என்பது தெளிவாகிறது. இதில் பலரும் தங்களுடைய தப்பெண்ணங்களைத் தவிர்த்து உண்மை நிலையை ஏற்க வேண்டும். இவ்வாறு பாரத தேசீயம் என்பது பாரத நாட்டின் பாரம்பரியத்தின் படியான கலாச்சார தேசியமே என்பதற்கு மகாகவி பாரதியின் பாடல்களும், கவிதைகளும் நமது ஆதாரமாக அமைந்துள்ளன. நமது பாரத தேசீயம் தேச பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்தது என்பதையும் அரசியலும் ஆன்மீகமும் இணைந்தது என்பதையும் இந்த நூல் விளக்கிக் கூறுகிறது. நமது கலாச்சார தேசியம் என்பது நமது உள்ளங்களில் நன்கு பதிய வேண்டும். உணர்வு பூர்வமாகப் பதிய வேண்டும். பாரத புத்திரர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களிலும் நன்கு பதிய வேண்டும். அதில் நாம் பெருமை கொண்டு பெருமிதம் அடைய வேண்டும்.