பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதநாட்டில் தேசிய இயக்கங்கள் 1 to முடிவாக 1857-ம் ஆண்டில் முதலாவது சுதந்திரப் போராட்டம் நாடு தழுவிய பெரும் போராட்டமாக வரலாற்றில் இடம் பெற்றது. இந்தப் போராட்டங்களும் பாரத நாட்டின் பாரம்பரியமான தேசிய உணர்வை ஆங்காங்கு வெளிப்படுத்தின. அக்காலத்தில்தான் பக்கிம் சந்திரளின் ஆனந்தமடமும், சந்நியாசிகள் இயக்கமும் வந்தே மாதர கீதமும் வெளிப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய பிரிவுகளும் சிந்தனைப் போக்குகளும் வெளிப்பட்டன. இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபை சார்பில் வெறும் மனுக்களும் விண்ணப்பங்களும் கொடுத்துக் கொண்டிருந்த நிலை மாறி புதிய பல வகையான தீவிரப் போராட்ட முறைகளும் எழுந்தன. லோக மான்ய பால கங்காதரத் திலகர், லாலா லஜபதி ராய், விர சாவர்க்கார், அரவிந்தர், விபின் சந்திரபால், தெற்கில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, வா.வே.சு. அய்யர், சுப்ரமணிய சிவா, விரவாஞ்சி, சுப்ரமணிய பாரதி முதலியோர் புதிய தீவிர இயக்கங்களின் பிரதிநிதிகளாக வெளிப்பட்டனர். இந்திய தேசீய இயக்கங்களும் இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபையும் புதிய பரிமாணங்களை எட்டியது. இருபதாம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஒரு மக்களியக்கமாக மலர்ந்தது. இந்திய தேசீயத்தின் பொருளும், கருத்து வடிவமும் விரிவுப் பட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி தலைமையும் மறு பக்கம் நேத்தாஜி சபாஷ் சந்திர போஸ் தலைமையும் கொண்ட இரு திசை வழிகள் வெளிப்பட்டன.