பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் [39] அவள் கையில் பார்த்தன் கை வில், வாளி ஒளிவீசி, மாரதர் பல கோடி வந்தாலும் அவர்களை எதிர்த்து முறியடிக்கும் வல்லமை கொண்டவளாக பாரதத்தாய் பாரதியின் முன்பாகக் காட்சியளிக்கிறாள். கல்கத்தாவில் கல்கத்தாவில் ஒரு தேச பக்தரின் மாளிகையில் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு பெரிய ஆல மரத்தின் கீழ் ஒரு பட்டியக்கல்லில் அமர்ந்து கொண்டு ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு பாரதி சிந்திக்கிறார். அவருடைய சிந்தனை உருவத்தில் நெடிது நோக்குப் பார்வையில் மீண்டும் பாரத தேவியின் பெருவடிவம் தெரிகிறது. இச்சகத்தின்(இந்த உலகத்தின்) பூரணமான ஞானப் புகழ் விளக்காக பாரத மாதேவி காணப்படுகிறாள். பேரிமய வெற்பு முதல் பெண் குமரியிராக தொன்மை மிகு ஆரிய நாடாகக் காட்சியளிக்கிறாள். அந்தத்திரு நாட்டில் பணிமால் இமயம் முதல் விந்தியமும் திருவேங்கடமும், பொதிகையும் காணப்படுகிறது. காசி முதல் ராமேசுவரம் வரை புண்ணிய நகரங்கள் தெய்வீகப் பெருநகரங்கள் காணப்படுகின்றன. யமுனையும், கங்கையும் சிந்து என்னும் தெய்வத்திரு நதியும், பொங்கிவரும் பிரம்ம புத்திராவும், மகாநதியும், கோதாவரியும், கிருஷ்ணாவும் துங்கபுத்திராவும், நருமதையும், தபதியும், காவிரி தென் பெண்ணை பாலாறு வைகை பொருனை என்னும் தெய்வத் திருநதிகளும் பாய்ந்து பொன்விளைக்கும் செழுமை மிக்க பூமி காணப்படுகிறது. பாரத அன்னை, தொன் மறைகள் நான்குடைய சீரும் சிறப்புமாய் எண்ணற்ற செல்வங்களுடன் பாரனைத்தும் அஞ்சும் சிங்கத்தின் மீது அமர்ந்து பவனி வருகிறாள். சத்தியமே செய்து தருமமே என்று ஒலி செய்து முத்திதரும் வேத முரசு கொட்டுகிறது. பொற்றாமரைத்தார் புனைந்து ஒளி குன்றாத வயிரக் கொடியேந்தி நிற்கிறாள்.