பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 97

கடைசியில் அறிவே தெய்வம் என்னும் கருத்தையும் முன்வைத்து

'ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் - பல்

ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம்

முண்டாம் எனல் கேளிரோ?

என்றும்,

'மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து

வெறும் கதைகள் சேர்த்து - பல

கள்ள மதங்கள் பரப்பு தற்கோர் மறை

காட்டவும் வல்லிரோ”

என்றும் முடிவுரை கூறி, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய திசை வழியில் செல்ல பாரதி புது நெறி காட்டுகிறார்.

அதை வைத்தே 'தெய்வம் நீ என்று உணர்' என்று பாரதி நமது குழந்தைகளுக்குப் போதிக்கிறார்.

|

49. தேசத்தைக் காத்தல் செய்

பாரதியின் புதிய ஆத்திசூடியில் இந்த அரிய கருத்துள்ள தேசபக்தச் செய்யுளும் ஒரு நல்ல ஆணி முத்துமாகும்.

தேசம், தேசபக்தி தேசத்தைக் காத்தல், நாடு, நாட்டுயர்வு, நாட்டை வளர்த்தல், இவையெல்லாம் பாரதியின் கவிதா மண்டலத்தில் நடு நடுநாயகமாக அடிநாதமாக ஆதார சுருதியாக உள்ள லட்சியக் கருத்தாகும்.

நாடு விடுதலை பெற வேண்டும். இந்த நாடு நமது. இதைக் காத்தல் நமது தலையாய கடமை, பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு’ என்பது பாரதியின் வாக்காகும்.

'இன்னல் வந்துற்றிடும் போது அதற்கஞ்சோம் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்'