பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 101

தனது பக்திப் பாடல்களில் சக்தியை அதிகமாகப் போற்றிப் பாடுகிறார். சக்தி, பராசக்தி, வள்ளி தேசமுத்துமாரி, கலைமகள், திருமகள், கண்ணம்மா என்றும் பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தைக் காவியமாகவே பாடி பெண்ணை உயர்த்துகிறார்.

'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார் கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக் காட்சி கொடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் கானர்'

என்று பாரதி முரசுப்பாட்டில் கூறுகிறார்.

பெண்களுக்கு இயற்கையில் பொது அறிவும், அனுபவ அறிவும் அதிகம் இருக்கிறது. கேள்விஞானம் அதிகம் இருக்கிறது. ஆயினும் சில மூடர் அவர்களை அடக்கி வைத்து சமுதாய வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள்.

மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதைப் போல சமுதாயத்தின் இரு கண்கள் ஆண்களும் பெண்களுமாகும். இதில் ஒன்றைக் குத்தி எடுத்து காட்சிப் பொருளாக வைக்கலாமா என்று பாரதி கேட்கிறார். பெண்களுடைய அறிவை வளர்த்தால் உலகில் பேதமை போகும் என்பது உண்மை. எனவே பெண்கள் நிலையை உயர்த்த வேண்டும்.

புதுமைப் பெண், பெண்விடுதலை, பெண்மை என்னும் தலைப்புகளில் பாரதி அருமையான கவிதைகளைத் தந்துள்ளார். அதில் பாரதி பெண்கள் விடுதலை பற்றியும், புதுமைப் பெண்ணின் உயர்வான கருத்துக்களையும் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார்.

பெண்களே மக்களைப் பெற்று அவர்களை வளர்க்கிறார்கள்.

பெண்கள் அறிவிலும் வீரத்திலும் குணத்திலும் சிறந்தவர்களாக இருந்தால் அவர்களுடைய மக்களும் அறிவிலும் வீரத்திலும்,