பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-அ.சீனிவாசன் 103

குற்றமென்று சொல்லுகிறாய் கோமகளே பண்டைய யுக வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது நீதமெனக்கூடும், நெடுங்காலச் செய்தியது. ஆனொடு பெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணி வந்தார், பின்னால் இஃது பெயர்ந்து போய் இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக் கொப்பில்லை மாதர், ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம், தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்'

என்றிவ்வாறு பதில் கூறுகிறார்.

பழைய வேதமுறைப்படி பெண்கள் சமமாகக் கருதப்பட்டனர். பின்னாளில் இது மாறிவிட்டது. உபநிடதங்களில் வருண முறை வகுக்கப்பட்டது. பின்னர் மனுவானவர் நீதி முறையை வகுத்தார். அதன் படி பெண்களும் சூத்திரர்களுக்குச் சமமானவர்களே என வகுக் கப்பட்டது. அதன்படி பிராமணப் பெண்கள் கூட சூத்திரர்களே. தொண்டு செய்வது அவர்கள் தொழில்.

பெண்கள் தந்தைக்கும், சகோதரர்களுக்கு கணவனுக்கும் பின்னர் பிள்ளைகளுக்கும் அடிமைபோல் ஆக்கப்பட்டார்கள். இந்த இழி நிலையை எதிர்த்தும் தொடர்ந்து கிளர்ச்சி நடந்து வந்துள்ளது.

பாஞ்சாலி சபையிலே வாதடினாள். அவள் குரலை சபையோர் கேட்கவில்லை. விகர்ணன் ஒருவன் மட்டும் பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசினான். கடவுளான கண்ணன் தான் பாஞ்சாலியின் அபயக்குரலுக்கு செவிகொடுத்து அவளுடைய மானத்தைக் காப்பாற்றினான்.

-- உபநிடதம் மற்றும் மனு நீதி முறைகளுக்கு எதிராக புத்தமும் :ச்மணமும் கருத்துப் போராட்டம் நடத்தியது. புத்த சங்கங்களிலும் சமண மடங்களிலும் ஆண்களுடன் பெண்களும் சமமாகத் துறவு பூண்டு சமயத் தொண்டு செய்தனர். அதனால் பெண் துறவிகளுக்கும் சமுதாயத்தில் மதிப்பு ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஆர்த்தெழுந்து பாண்டியன் சபையில்