பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lo- பாரதியின்-புதிய-ஆத்திசூடி-O

விருப்பமும் அறிக்கோளுமாகும். ஆயினும் நமது எல்லா யற்சிகளிலும் வெற்றி ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அல்னிகளும் ஏற்படுகின்றன.

வெற்றியில் களிப்பும், தோல்வியில் கலக்கமும் கூடாது என்பது பொதுச் சொல்லாகும். நாம் நமது வாழ்க்கையில் பல முயற்சிகளும் செய்கிறோம். தொழில்களைத் தொடங்குகிறோம். சாகுபடி வேலைகளைச் செய்கிறோம். வியாபாரங்களைத் தொடங்குகிறோம். ஆராய்ச்சிகள் செய்கிறோம். புது முயற்சிகள் பல மேற்கொள்கிறோம். படித்துப் பரீட்சை எழுதுகிறோம். இத்தகைய பல முயற்சிகளிலும் பணிகளிலும் வெற்றியும் ஏற்படலாம். சில சமயங்களில் தோல்வியும் ஏற்படலாம் என்பது அனைவரின் அனுபவங்களாகும். அதில் தோல்வி ஏற்படும் போது நம்மில் கலக்கமோ சோர்வோ விரக்தியோ ஏற்படக்கூடாது.

'செய்தல் உன் கடனே - அறம் செய்தல் உன் கடனே - அதில் எய்திடும் விளைவினில் எண்ணம் வைக்காதே’’

என்றும் பகவத்கீதையின் கருத்தை பாரதி முன் வைக்கிறார். பலனைப் பற்றிக் கருதாமல் கவலை கொள்ளாமல் பற்றுக் கொள்ளாமல் உனது கடமைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்பது கீதையின் சொல்லாகும். அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்க வேண்டும்' என்பது கிராமத்துப் பழமொழி. சாகுபடித் தொழிலில் நாம் எதிர்பார்க்கும் பலன் ஏற்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. இயற்கையின் விளைவுகளால் சாதகமான பலன்களும் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டு விடலாம். அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நமது சாகுபடித் தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது அதன் பொருள்.

அதே போல் தொழில் மற்றும் வர்த்தகத்தில் மார்க்கெட் நிலவரங்கள் கரணமாக வெற்றி தோல்விகள் ஏற்படலாம். ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றி தோல்வி ஏற்படலாம். பரீட்சைகளில் வெற்றி தோல்வி ஏற்ப லாம். அதைப் பற்றி கவலைப்படாமல் அப்பணிகளைத் தொடர வேண்டும் என்பதாகும்.