பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 123

தாளங்களையும் வளர்த்தான், குழலிசையும், யாழிசையும் தாளக்கருவிகளும் வளர்ந்தன. இன்று பல நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளும் தாளக்கருவிகளும் வந்துள்ளன. இவை மேலும் பெருகும். அவையெல்லாம் பாட்டுக்கும் இசைக்கும் ராகங்களுக்கும் தாளங்களுக்கும் ஆதாரமாகத் துணையாக வளர்ந்து வந்துள்ளன. அந்தப் பாட்டின் மீது அன்பு செய்து வளர்க்க வேண்டும்.

நமது பாரத நாடு இசை தாளங்களுக்குரிய தேவதைகளையும் தெய்வங்களையும் வளர்த்திருக்கிறது. நமது தெய்வங்களுடன் இசைக்கருவிகளையும் இணைத்துள்ளோம். கண்ணனின் குழலும் கலைமகளின் யாழும் இறைவனின் உடுக்கும், நந்தியின் மத்தளமும் நாம் போற்றும் இசைக்கருவிகளாகும். நாரதரும் தும்புருவும் இசையின் வடிவங்களாகப் போற்றுகிறோம்.

"நாரதகான நலந்திகழ்நாடு' என்று பாரதி குறிப்பிடுகிறார். "புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம், பொங்கிய தெங்கும் சுதந்திரம் நாதம், வெள்ளிய சங்கம் முழுங்கின கேளாய்” என்று பாரதி பாடுவதைக் காணலாம்.

'வினையடி நீயெனக்கு, மேவு விரல் நானுனக்கு பண்ணுகதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு நாதவடிவானவளே நல்லவுயிரே கண்ணம்மா’’

என்று பாரதி இனிமையாகப் பாடுகிறார்.

பிறந்த போது குழந்தைக்குத் தாலாட்டுப் பாட்டும் இறந்த போது ஒப்பாரிப் பாட்டுமாக பிறப்பிலிருந்து அத்தனை நிலைகளிலும் பாரதம் பாட்டில் வளர்ந்திருக்கிறது. கோலாட்டம், நலுங்குப்பாட்டு வண்டிப்பாட்டு, நடுகைப்பாட்டு, கோவில்களில் சங்கும் முரசும் பள்ளியெழுச்சிப் பாடல்களும், காலைப்பாட்டுகள், மாலைப்பாட்டுகள், பாட்டுக் கச்சேரிகள், இசைவிழாக்கள் பாராட்டுப் பாடல்கள் வாழ்த்துக் பாடல்கள், கூத்துப்பாடல்கள், காதல் பாடல்கள் இப்படி எண்ணற்ற பாட்டு வகைகளையும்

வளர்த்து மகிழ்ந்திருக்கிறோம்.