பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 129

'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்னும் கம்பருடைய கடவுள் வாழ்த்துப் பாடலும் உலகில் உள்ள சகலவிதமான பொருள்களும் ஆக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் என்னும் நிலையில் மாறி மாறி வருவதையும் வளர்ச்சி பெறுவதையும் குறிப்பதாகும்.

மனித சமுதாய அமைப்பிலும் உலகளாவிய வளர்ச்சியில் ஆதிகாலம் தொட்டு மனிதனுயை தேவைகளுக்கான உற்பத்தி முறைகளில் உற்பத்தி சக்திகளில், உழைப்பு சக்தியில், அரசியல் ஆட்சி முறை, அதிகாரம், நீதி முறைகளில் சட்டம், எண்ணங்கள், சிந்தனைகள், மனோபாவங்கள், நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்கள், கலை இலக்கியம், கலாச்சாரம் முதலியவைகளில் எல்லாம் பல மாற்றங்கள் ஏற்பட்டு புதிய நிலைகளுக்கு எட்டிருக்கின்றன. காலப் பயணத்தில் பழையன கழிந்து புதியன வந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் புதிய நிலைகளை நாம் விரும்புகிறோம் வரவேற்கிறோம். இதற்கு எதிரான பழைய சக்திகள் வரலாற்றில் பின்னுக் தள்ளப்பட்டுப் படிப்படியாக மறைந்து விடுகின்றன. எனவே பாரதி புதியன விரும்பு என்று நமக்கு ஊக்கமூட்டுகிறார். 70. பூமியிழந்திடேல்

பூமி என்றால் உலகம், பூமி என்றால் நாடு, நமது பூமி பாரத பூமி, பூமி என்றால் நிலம், இந்த பூமியை இழந்திடே இந்த உலகத்தை இழந்து விடக்கூடாது, இந்த இெ நாட்டை இழந்து விடக் கூடாது நமது ' ☾NᎽ7

நிலத்தை இழந்துவிடக் கூடாது என்று பொருள் கொள்ளலாம்.

நளன் என்னும் ஒரு அரசன் பேரரசனாக AS தனது நாடான நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டு வந்தான்.