பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

யாருக்கும் கெடுதல் இல்லாமல் கூடுமான வரையில் மற்றவர்களுக்கு நல்லது செய்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும். அதில் தான் மனிதனுக்குப் பெருமை இருக்கிறது. நாம் வாழ்க்கை நடத்துவதற்கு ஏதாவது தொழில் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு தொழில் செய்யும் போது அது யாருக்கும் துன்பம் விளைவிக் காத தொழிலாக நாணயமான தொழிலாக மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

அவ்வாறு நல்ல தொழில் செய்து நாம் நமது கவுரவத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வாழ வேண்டும். அதுவே மானமுள்ள வாழ்க்கையாகும். நாம் நமது மானத்தைப் போற்றுவதுடன மற்றவர்களின் மானத்தையும் போற்ற வேண்டும்.

நாம் நமது கவுரவத்தையும் மானத்தையும் போற்றுவதுடன் நமது வீட்டு கவுரத்தையும் மானத்தையும் நாட்டு கவுரவத்தையும் மானத்தையும் போற்ற வேண்டும்.

நமது வீட்டில் நாம் ஒற்றுமையாக இல்லாமல் சண்டையடித்துக் கொண்டால் நமது கவுரவம் பாதிக்கப்படும். நமது வீட்டில் உள்ள ஒருவர் தவறு செய்தால் அது நமது வீட்டு கவுரவத்தைப் பாதிக்கும். அதேபோல நமது தெருவில் நமது ஊரில் ஒரு சிலர் தவறு செய்தால் அது நமது தெரு ஊர் ஆகியவற்றின் கவுரவத்தைப் பாதிக்கும்.

நமது நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் நமது நாட்டு மக்கள் நன்றாக உழைத்து நாடு முன்னேற்றம் கண்டால் நமது நாட்டில் ஒரு நல்ல ஆட்சி ஏற்பட்டு மக்கள் சுபிட்சமாக இருந்தால் நமது நாட்டிற்கு இதர நாட்டு மக்களிடம் பெருமையும் புகழும் நன்மதிப்பும் ஏற்படும். இதில் குறைவுகள் ஏற்பட்டால் நமது கவுரவம் குறையும், மானம் குறையும் மதிப்பு குறையும்.

மானத்தைப் போற்று என்று பாரதி கூறும் போது நமது

தனிநபர் மானத்தையும் நமது குடும்பத்தின் மானத்தையும், நமது தெரு, ஊர் மானத்தையும் நமது நாட்டு மானத்தையும் போற்றி