பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 145

உடைத்து அதிலிருந்து மீள்வதற்கு பாண்டவரில் பார்த்தன் மட்டுமே அறிந்தவன். பார்த்தனோ அப்போது போர்க்களத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தான். சக்கரவாள வியூகத்தினால் சேதம் அதிகரித்துக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி பார்த்தனின் மகன் அபிமன்யு துணிந்தான். சக்கரவாள வியூகத்தைப் பிளந்து உள்ளே சென்றான். அபிமன்யுவை அனைவரும் சுற்றி வளைத்துக் கொண்டனர். அபிமன்யூவிற்கு வியூத்திலிருந்து மீள்வதற்குத் தெரியவில்லை. மீளமுடியாமல் போர்க்களத்தில் அபிமன்யூ வீரமரணம் அடைந்து வரலாற்றில் இடம் பெற்றான். ஆனால், வெற்றி பெறாமல் மரணமடைந்தான்.

நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய எத்தனையோ நல்ல பணிகள் உள்ளன. அதே சமயத்தில் நமக்கு பல கஷ்டங்களும் துன்ப துயரங்களும் ஏற்படுகின்றன. நமது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. அவைகளையெல்லாம் சமாளித்து நாம் மீள வேண்டும்.

இயற்கையால், மழை, வெள்ளங்களால், வறட்சியால், பசி பட்டினி வறுமையால், கல்லாமையால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நாடும் நாட்டு மக்கள் எல்லாம் மீளவதற்கான வியூகங்களை வகுத்து அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

அடிமைத் தனத்திலிருந்து ஆட்சிக் கொடுமைகள் அதிகாரக் கொடுமைகளில் இருந்தும், சமுதாயக் கொடுமைகளில் இருந்தும், ஆதிக்க கொடுமைகளில் இருந்தும் நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிப்பதற்கு பாரதி கனவு கண்டார். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு மக்களுடைய உணர்வு உயர்த்தப்பட்டு நாடு விடுதலை பெற்றது.

இதையே பாரதி மீளுமாறு உணர்ந்து கொள் என்று கூறினார். அதேபோல் இன்று நாம் நமக்கு முன்புள்ள பல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வியூகமும் திட்டமும் வகுத்து வெற்றி பெற வேண்டும்.