பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாதியின்-புதிய-ஆத்திசூடி-9

அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயத்தைச் சார்ந்த கிராமப்புறத் தொழில்கள் கால் நடை பராமரிப்பு பால் உற்பத்தி, பட்டு உற்பத்தி விவசாய உற்பத்திப் பொருள்கள் சார்ந்த சிறு தொழில் குறுந் தொழில்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் தான் நாட்டின் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

விவசாயத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது நீர்ப்பாசனமாகும். நமது நாட்டின் நீர்வளம் அதிகம். நமது நாட்டின் பாரம்பரியமான நீர்ப்பாசன முறை கால்வாய்கள். ஏரி கண்மாய்கள், கிணறுகள் முதலியனவாகும் அத்துடன் அணைக்கட்டுகள் நீர்த் தேக்கங்களையும் கட்டியிருக்கிறோம். ஆயினும் நமது நீர்ப்பாசன வசதி, பழைய நீர்ப்பாசனங்களைப் பராமரிப்பதும் போதாது. ஏரி கண்மாய் கால்வாய்களைச் சீரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். நமது நாட்டு நதிகளையும் படிப்படியாக இணைக்க வேண்டும்.

'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’

என்று பாரதி நெடிது நோக்குடன் பாடியுள்ளார்.

நமது நாட்டு நீர்வளத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் நாம் வெற்றி கண்டால் நமது நாட்டின் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதை உறுதிப்படுத்த முடியும். அத்துடன் உணவு தானியம் பருத்தி கரும்பு நிலக்கடலை, கடுகு முதலிய எண்ணெய் வித்துக்கள் தேங்காய் முதலிய பிரதானமான சாகுபடி பொருள்கள் காய்கறிகள், மா, பலா, வாழை மற்றும் கனிவகைகள், மலர்கள் முதலியவற்றையும் அவைகளின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

நமது விவசாயத் தொழிலை சகல துறைகளிலும் நவீனப்படுத்த வேண்டும். குறைவான வட்டி விகிதத்தில் போதுமான அளவில் சுலபமான முறையில் கடன் வசதிகளும