பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாரதியின்-புதிய-ஆத்திசூடி o

- -

யாவரையும் மதித்து வாழ் என்று கூறும் போது தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு சமுதாயக் கூட்டமைப்புகளுக்கும் பொருந்தும் நாடுகளுக்கும் பொருந்தும்.

நாம் குடியிருக்கும் பகுதிகளில் தெருக்களில் ஊரில் அண்டை வீடுகளில் உள்ள மற்றவர்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும். அப்போது நமது வாழ்க்கை சுமூகமாக அமையும்.

வேறுபட்ட மொழிகள் பேசும் மக்கள் வேறுபட்ட இனம், மதநம்பிக்கை கொண்டவர்கள், சாதிகள், குலங்களை, நிறங்களைச் சேர்ந்த மக்கள் நம்மைச் சுற்றிலும் உலகிலும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் பாகுபாடுகள் பகைமை காட்டாமல் பரஸ்பரம் மதித்து இணக்கமாக வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு நமது மொழிமீதோ, நமது இனத்தின் மீதோ, நமது நாட்டின் மீதோ அதிகமான பற்று இருக்கலாம் அவ்வாறு பற்று இருப்பது இயல்பு. இன்னும் மொழிப்பற்று தேசப் பற்று ஆகியவைகளை வளர்க்கவும் வேண்டும். அதே சமயத்தில் மற்ற மொழிகளையும் அம் மொழி பேசும் மக்களையும் இன மக்களையம் நாடுகளையும் நாட்டு மக்களையும் மதிக்க வேண்டும். பரஸ்பரம் நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும்.

நமது நாட்டில் பல்வேறு மத நம்பிக்கைகளும் வழிபாடுகளும் இருக்கின்றன. அதிலுள்ள வேறுபாடுகள் காரணமாக நமது வரலாற்றில் பல மதக்கலவரங்களும் மதக் கொலைகளும் நடந்திருக்கின்றன. அவையெல்லாம் நமது வளர்ச்சியையும் ஒற்றுமையையும் பாதித்து இருக்கின்றன. இத்தகைய முரண்பாடுகளையும் சகோதர மோதல்களையும் தவிர்த்து பரஸ்பரம் மதிப்பு கொடுத்து நல்லிணக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.

நமது நாட்டில் வேறு எங்கும் இல்லாத சாதி அமைப்பு முறை இருக்கிறது. இந்த சாதி அமைப்பு முறை காலம் கடந்த ஒன்றாகும். சாதிகள் ஒழிய வேண்டும் என்று பல நல்லவர்களும் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆயினும் அவை நீடிக்கிறது. சண்டைகளும் ஏற்பட்டு நமது பொது வாழ்வைச் சீரழித்திருக்கிறது. இந்த