பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன்

இளமையில் கல் முதுமையில் மண் என்று திட்டிக் கொண்டே பெரியவர் தலையில் ஒரு குட்டு குட்டிவிட்டு, அதே சிந்தனையில் வீட்டிற்குச் சென்று "புதிய ஆத்தி சூடி” பாடினார் என்று கூறப்படுகிறது.

கதை எப்படியிருந்தாலும் பாரதியின் புதிய ஆத்திசூடி புதுமைமிக்கது; பயனுள்ளது தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிகளில் இந்தப் புதிய ஆத்திசூடியை கட்டாயப் பாடமாக்கினால் கூட நல்லது. பாரத நாட்டின் இதர மொழிகளிலும் இந்தப் புதிய ஆத்திசூடியை மொழியாக்கம் செய்து நாட்டின் எல்லா மொழிக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் இன்னும் நல்லது.

புதிய ஆத்திசூடிக்கு பாரதி எழுதியுள்ள காப்புப் பாடலில் 11 ம் பொருள் வாழத் தாக எல்லாக் கடவுள்களையும் குறிப்பிடுகிறார். சர்வமத சமரசமாக அனைத்து சமயங்களின் ஒற்றுமையாகப் பாடியுள்ளார்.

"ஆத்திசூடி இளம்பிற யணிந்து மோனத்திருக்கு முழு வெண்மேனியான் கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் பலவகையாகப் பரவிடும் பரம் பொருள் ஒன்றே ! அதனியல் ஒளியுறுமறிவோம் அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார் அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம்”

என்று தொடங்குகிறார். இதில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு அனைத்து மதங்களிலும் கூறப்படுவது ஒரே பரம்பொருளைப் பற்றித்தான். அந்தப் பரம் பொருளில் ஒளியுறுவது அறிவு. அந்த அறிவு நிலை கண்டாருக்கு அல்லல் இல்லை. எனவே அத்தகைய பரம் பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் என்று பாரதி பரம் பொருள் வாழ்த்தைத் தனது காப்புப் பாடலில் பாடுகிறார்.