பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15B பாதியின்-புதிய-ஆத்திசூடி-9

காத்தல் செய்தல் வேண்டும். முதலில் நாம் நமது உடல் ஆரோக்கியத்தை காத்தல் அவசியம், அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு தண்ணிர் சுற்றுச்சூழல், உடற்பயிற்சி நல்ல பழக்கவழக்கங்கள் முதலியன மிகவும் அவசியமாகும்.

நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் முக்கியமானதாகும். காலையில் எழுந்திருத்தல் காலைக்கடன்களை முடித்தல், உடற்பயிற்சி செய்தல் படித்தல், வேலை செய்தல், விளையாட்டு, நல்ல உறக்கம் முதலிய பழக்கங்கள் நல்லது.

புகை பிடித்தல், போதை பொருள் உபயோகித்தல் முதலியவை உடல் நலத்தைக் கெடுத்து விடும். சுவாசக் கருவிகளையும் ஜீரண உறுப்புகளையும் கெடுத்து விடும். அதனால் இளமை பாழாகி விடும். பல நோய்களுக்கு காரணமாகி விடும். கண்கள் குழி விழுந்து முதுகு வளைந்து உடல் அமைப்பைக் கெடுத்து விடும். உடல் சோர்வும் உள்ளச் சோர்வும் ஏற்பட்டு விடும். அதற்கு இடமளித்து விடக்கூடாது.

இரண்டாவதாக நல்ல மனப்பயிற்சி வேண்டும். நன்கு படிக்க வேண்டும். நல்ல கவனம் நல்ல சிந்தனை ஆராய்ச்சி ஆகியவைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவைகளையே எண்ண வேண்டும். எதற்கும் கவலைப்படக் கூடாது. எத்தகைய கஷ்டங்கள் தொல்லைகள், தொந்தரவுகள் ஏற்பட்டாலும் மனவேதனையோ கவலையோ படாமல் மகிழ்ச்சியுடன் எப்போதும் முகமலர்ச்சியுடன் இருந்தால் உடல் நிலை நன்றாக் இருக்கும். எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். கவலைகளை மறந்து மனநிம்மதியுடன் இருக்க வேண்டும். அதற்கான தியானங்களையும் செய்து கொள்ளலாம்.

மூன்றாவதாக நமது உள்ளத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு இடைவிடாது சுறுசுறுப்பாக எப்போதும் வேலைசெய்து கொண்டே இருக்க வேண்டும். நல்ல லட்சியங்கள் மீது பற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் தொண்டு செய்ய வேண்டும். இவைகள் மூலம் இளமையை யெளவனத்தைக் காத்தல் செய்யலாம்.