பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O_அ.சீனிவாசன்- 173

இணைந்து அசைவாகவும் அதை அனுசரித்தும் நின்று மேலும் பல புதிய உண்மை நிலைகளைக் கண்டும், அவைகளை மனித வாழ்க்கைக்கு சீராகவும் செம்மையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள இதர உயிரினங்களும் பொருள்களும் இயற்கையோடு இணைந்தவை. அவைகளையும் நாம் காப்பாற்ற நமது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். அவைகளை நமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும். சக்திகளையும் அதனால் உண்டாக்கப் பட்டவைகளையும் பாதுகாத்து அவைகளின் பகுதிகளுக்கு அழிவோ சேதமோ ஏற்பட்டு விடாமல் அவைகளை நாம் உலக நலனுக்காக மனித நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லீலை உலகம் நீடுழி வாழ்க.

100. (உ) லுத்தரை இகழ்

உலுத்தர்கள் என்றால் அற்பர்கள் அயோக்கியர்கள், தீயவர்கள், கெட்டவர்கள், சுயநலமிகள், நேர்மையற்றவர்கள் என்றெல்லாம் கூறலாம் இவர்கள் தங்கள் சொந்த நலன்கள் தங்கள் சொந்த வாழ்க்கைச் சுகங்களே கருதி மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள். மோசடி செய்கிறார்கள். எளியோரைத் தாக்குகிறார்கள், பலபேருடைய உழைப்பை அபகரித்து சுகவாழ்வு வாழ நினைக்கிறார்கள்.

உலுத்தார்கள் மனிதரில் கீழ்ப்பட்டவர்கள். மனிதரில் கடையர்கள் அவர்களால் அடுத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை இல்லை. தீமையே ஏற்படுகிறது. அத்தகைய உலுத்தர்களைக் காரி உமிழ்ந்து இகழ்ந்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பது பாரதியின் ஆணையாகும்.

101. (உ)லோக நூல் கற்றுனர்

மனித சமுதாயத்தின் தொடக்கக் கால வரலாற்றில் நெருப்பின் பயன்பாட்டை மனிதன் கண்டுபிடித்தது ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாகும்.