பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

பொருளைப் பற்றித் தெளிவாகத் தெரிச்து கொண்டு பேச வேண்டும். நமக்குப் போதுமான விஷய ஞானம் இருந்தால் தான் பேச்சிலும் தெளிவு இருக்கும்.

நாம் பேசுவது என்பது வீட்டிலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மட்டுமல்ல. ஊர் மக்களிடம் பேச வேண்டும். கூட்டங்களில் பேசு வேண்டும் மேடைகளில் பேச வேண்டும். நடிகர்கள் நாடகங்களில் சினிமாவில் வசனங்கள் பேச வேண்டும். ஆசிரியர்கள் வகுப்புகளில் பேச வேண்டும். வழக்கறிஞர்கள் நீதி மன்றங்களில் வாதாடும் போது பேச வேண்டும்.

சட்ட மன்றங்களில் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பேச வேண்டும் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் பேச வேண்டும். கருத்தரங்குகளில் பங்கு கொள்பவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்ட தலைப்புகளில் பேச வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் குழந்தைகள் எதிர்காலத் தலைவர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள், பேச்சாளர்களாவர், இவ்வாறு நாம் பேச வேண்டிய இடங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் வெடிப்புறப் பேசப் பழக வேண்டும்.

பாரதி காலத்தில் நாடு அடிமைப்பட்டு கிடந்தது. அப்போது விடுதலைப் போராட்டத்தில் மக்களிடம் செய்திகளை கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு மேடைப் பேச்சுக்கள், பொதுக் கூட்டங்கள் முக்கியமான சாதனமாக இருந்தது. மக்களிடம் ஆவேசமாகப் பேசி உணர்ச்சி ஊட்ட வேண்டியிருந்தது. அதற்காகப் பல பேச்சாளர்களும் தயாராக வேண்டியதாயிற்று. அதற்கெல்லாம் பாரதியின் வாக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தது.

இப்போது மக்களாட்சி குடியரசு மலர்ந்துள்ள காலம், எனவே நாட்டு விவகாரங்களில் உலக விவகாரங்களில் மக்களுடைய பங்கு அதிகம் மக்ளுடைய பங்குக்கு அதிக முக்கியத்துவமும் வாய்ப்புகளும் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.