பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B பாதியின்-புதிய-ஆத்திசூடி-O

97. லவம்பல வெள்ளமாம் 98. லாவகம் பயிற்சி செய் 99. லீலை இவ்வுலகு 100.(உ)லுத்தரை யிகழ் 101. (உ)லோக நூல் கற்றுனர் 102.லெளகீக மாற்று 103. வருவதை மகிழ்ந்துண் 104.வானநூல் பயிற்சி கொள் 105. விதையினைத் தெரிந்திடு 106.வீரியம் பெருக்கு 107. வெடிப்புறப் பேசு 108.வேதம் புதுமை செய்

109. வையத்தலைமை கொள் 110. வெளவுதல் நீக்கு

1. அச்சம் தவிர்

அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். பயத்தைப் போக்க வேண்டும். பயத்தைக் கொல்ல வேண்டும், எதற்கும் அஞ்ச மாட்டோம், எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே, அச்சம் தீரும், அமுதம் விளையும், அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன், அச்சமில்லை அமுங்குதலில்லை, அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம், யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்போழுதும் அஞ்சோம், எதற்கும் இனி அஞ்சேல், ஜயமுண்டு பயமில்லை மனமே, அச்சத்தைச் சுட்டு அங்கு அதற்கு சாம்பலுமின்றி அழித்திடுவோம், உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, பயம் என்றும் பேய்தனை அடித்தோம், பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா.

என்றெல்லாம் பாரதி தனது பாடல்களிலும் கவிதைகளிலும் பல இடங்களிலும் கூறுகிறார்.

அச்சம் தான் மனிதனுடைய எல்லா துன்பங்களுக்கும் துயரங்களுகும் இன்னல்களுக்கும் மூல காரணம் அச்சம் நீங்கினால் அடிமைத்தனம் போகும். அச்சம் நீங்கும் போது மனிதன் முழு மனிதனாகி விடுகிறார்.

“எங்கு அச்சமில்லையோ அந்த இடத்திற்கு எனது நாடு விழிப்படையட்டும்” என்று வங்கக் கவிஞர் குருதேவரும் கூறினார்.