பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 191

மற்றவர்களுக்குச் சொந்தமானவற்றை திருட்டுத்தனமாகவோ வன்முறைகளிலோ சூழ்ச்சிகளினாலோ அல்லது வேறு எந்த நேர்மையற்ற வழியிலோ கைப்பற்றுதல் தவறானதாகும். அத்தகைய தவறான போக்குகளை நம்மிடையே வரவிடக் கூடாது. அத்தகைய உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் அவற்றை நீக்க வேண்டும்.

எப்போதுமே மற்றவர்களிடமிருந்து எடுப்பதைக் காட்டிலும் கொடுப்பதே மேலாகும். எனவே நம்மிடம் நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படுவதற்கு வெளவுதல் நீக்குவது நல்லது என்று பாரதி எடுத்துக் காட்டுகிறார்.

க 軌 க *్మ* *** *్మ*

பாரதியின் புதிய ஆத்திசூடி ஒரு நல்ல இலக்கியமாகும். நல்ல அறிவுரைகளும் ஆணைகளும் நிரம்பியதாகும். நாட்டின் தேவைகளை வலியுறுத்திக் கூறுவதாகும். நமது அறிவுத்துறை வளர்ச்சியின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகும். பாரதியின் இந்தக் கருத்துக்கள் நமது நாட்டு மக்களிடத்தில் பரவ வேண்டும். குறிப்பாக நமது குழந்தைகளிடத்தில் இளம் சந்ததியினர் இடத்தில் ஆழமாக வேர்விட்டுப் படர வேண்டும். பாரதி வேதத்தைப் புதுமை செய் என்று கூறி நமக்கு முன் புதிய வேதத்தையும் முன் வைத்திருக்கிறார். அதைப் பலமுறை படித்துப் பயன்பெற வேண்டும். பாரதியின் கவிதைகளைப் புதிய வேதமாக நாம் படிக்க வேண்டும். நமது நாட்டு மக்களிடையில் பரப்ப வேண்டும்.

© © ()