பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9_அ.சீனிவாசன் 13

ஈகைத்திறனுக்குக் கருணை உள்ளம், இரக்ககுணம் இருக்க வேண்டும். உயிர்கள் மீது இரக்கம் கொள்ளுதல் தேவையான உதவி செய்தல் ஆகிய நற்பண்புகளை வளர்க்க வேண்டும். ஈகை என்பது வேண்டுபவர்களுக்குக் கொடுக்கும் கொடைத்தன்மை மட்டுமல்ல. அது இன்னும் விரிவடைந்த பொருள் கொண்டதாகும், எனவே தான் பாரதி அதை "ஈகைத்திறன்” என்று குறிப்பிடுகிறார். அத்தகைய விரிவடைந்த பொருளில் நமது குழந்தைகளின் உள்ளங்களைப் பக்குவப்படுத்த வேண்டும். நமது குழந்தைகள் விசாலமான உள்ளங்களைக் கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும். நமது குழந்தைகள் ஈகைத்திறம் கொண்ட சிறந்த குடிமக்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பது பாரதியின் விருப்பமாகும்.

8. உடலினை உறுதி செய்

மனித வாழ்க்கையில் உடல் நலம் மிக முக்கியமாகும். உடல் ஆரோக்கியம், நோயின்மை ஆகியவை உள்ளத்தின் வளர்ச்சிக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானதாகும். உடல் ஆரோக்கியத்திற்கு உடல் வலுவாக இருக்க வேண்டும். அதற்காக ல்ல உணவும் உடற்பயிற்சியும் அவசியமாகும்.

உடலினை உறுதி செய்வதற்காக எல்லா நாடுகளிலும் hபயிற்சி. விளையாட்டு வித்தைகள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. பயிலுவிக்கப்படுகின்றன. விளையாட்டுப் பாட்டிகள் முதலியவை நடத்தப்பட்டு உடலினை உறுதி செய்ய

ாக்குவிக்கப்படுகின்றன,

உடல் உறுதிக்கும் வலிமைக்கும் நமது நாட்டுக் கதைகளில் பந்த பாத்திரப் படைப்புகளும் நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன. 1ளை சிங்கம் போன்ற உடல் பலமும் உறுதியும் மிக்க வங்களும் நமக்குக் காட்டப்படுகின்றன.

இராமாயணக் கதையில் இராமன், அனுமன், இராவணன் கியோர் உடல் பலமும் உறுதியும் உள்ளவர்கள். அனுமன் சிறந்த ா லியாகவும் செயற்கரிய செய்யும் திறனாளனாகவும்

ப்படுகிறான்.