பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

உணவுப் பொருள்கள் மட்டுமல்ல நல்ல மருத்துவ குணம் உள்ள பொருள்களுமாகும். இவையெல்லாம் நமது உணவில் அன்றாடம் உபயோகத்தில் உள்ளவைகளாகும்.

உணவு வகையில் சுவைகளில் அறுசுவையாகப் பிரிதது அனுபவ பூர்வமாக ஆய்வு செய்து உணவுப் பொருள்களையும் நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய அறுசுவைகளும் நமது உணவில் உள்ளன. இவைகளைச் சீரான வகையில் நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவை மட்டும் அல்ல நமது உடல் நலனுக்கு உகந்ததுமாகும். H.

நமது நாட்டு சமயங்களும் விரதங்களும் கூட உணவு வகைகளிலும் மருந்துகளிலும் அதிகம் கவனம் செலுத்தியுள்ளன. நமது கோவில்களிலும் சிறந்த உணவுப் பதார்த்தங்கள் வினியோகிக்கப்படுகின்றன, லட்டு முறுக்கு, வடை, தோசை, இட்லி, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்ச்சாதம், கல்கண்டு மற்றும் வெண்பொங்கல், சுண்டல் பஞ்சாமிர்தம் மற்றும் பல வகை சித்திரான்னங்கள், உக்கரை, ஆப்பம், அதிரசம், இன்னும் பல உணவுப் பண்டங்கள் நமது கோவில்களில் வினியோகம் செய்யப்படுகின்றன, ஒவ்வொரு கோவிலும் தனித்தனியான உணவுப் பண்டத்தில் கவனம் செலுத்தியுள்ளதைக் காண்கிறோம். '

சில விசேஷ நாட்களில் பண்டிகைகளில் ஏகாதசி, அமாவாசை, ஆடி, தை என்றெல்லாம் பண்டிகைகளை வகுத்து அதற்குரிய உணவுப் பண்டங்களையும் நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள், தான்யங்கள், காய்கள், பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகள் கிழங்கு வகைகள், தண்டு வகைகள் முதலிய வகைகளாகப் பிரித்து அவைகளின் சிறப்புகள் பற்றியெல்லாம் ஆய்வு செய்து உணவில் நமது முன்னோர்கள் சேர்த்திருக்கிறார்கள்.

இத்தகைய பல வேறு உணவு வகைகளை நாம் போதுமான அளவில் உற்பத்தி செய்து கொள்வதற்கும் நமது நாட்டில் கிராமங்களிலும் சரி, நகர்புறங்களிலும் சரி போதுமான இடம்,