பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

கூட கூர்மையானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக பார்க்கும் திறன், மனிதனைக் காட்டிலும் கழுகு, கருடன் ஆகியவைகளுக்கு அதிகமானது. கூர்மையானது, வெகு உயரத்தில் பறக்கும் போது கூட கீழே பூமியில் உள்ள ஒரு சிறு கோழிக்குஞ்சு, எலி ஆகியவற்றைத் துல்லியமாகப் பார்த்து விடும். மோப்பத்திறன் - மனிதர்களைக் காட்டிலும் நாய்களுக்கு அதிகம். கேட்கும் திறன் - மனிதர்களைக் காட்டிலும் பாம்புகளுக்கு செவித்திறன் அதிகம். தொட்டால் சுருங்கிவிடும் சில தாவரங்கள் இருக்கின்றன, அவைகளின் தொட்டுணர்வு மனிதனுடையதைக் காட்டிலும் அதிகம். அதனால் கரு னோ, பாம்போ, நாயோ, தொட்டால் சிாறுங் செடி பே மனிதனைக் காட்டிலும் அறிவில் சிறந்தது ாய ப|lyப முடியது குருவி . ( கட்டுகிறது. கரையான பரிய (II, IIது. ('Inn് ሥ" (ካብ கட்டுகிறது. இவையெல்லாம் wயாவிலேயே அத்தகையதொரு (திகளைக் கட் டுகின்றன, அாவயெiயம் பாllதாா க் ாட் டி லும் அறிவுத்திறன் அதிகம் கொண்ட வை என்று கூறமுடியுமா, முடியாது காரணம்

7

மனிதன் ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகள் மூலமாக உலகை அறிகிறான். அந்தப் புலனறிவை ஒன்று குவித்து இணைத்து பகுத்து ஆய்வு செய்து முடிவுகளுக்கு வருகிறான், அதாவது மனிதன் தனது பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும், ருசிக்கும் திறனையும், மோப்பத் திறனையும், தொட்டுணர்வையும் ஒன்று குவித்து இணைத்து சிந்தித்து ஊகம் செய்து ஆராய்ந்து பகுத்துப் பார்த்து பல முடிவுகளுக்கும் வருகிறான், இது மனிதனால் மட்டுமே முடியும் வேறு எந்த உயிர்ப் பொருளாலும் முடியாது.

அது போல் மனிதன் ஒரு செயலைச் செய்ய வேண்டுமானால், அக்காரியத்தை நிறைவேற்ற வேண்டுமானால், விலங்குகளோ, பறவைகளோ இதர உயிர்ப் பொருள்களோ தங்களுடைய இயல்புணர்வில் செய்வதைப் போல அல்லாமல் முன்கூட்டியே சிந்தித்துத் திட்டமிட்டு அதற்கான இதர தயாரிப்புகளையும் செய்து கொண்டு அந்த வேலையைச் செய்து முடிக்கிறான்.