பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 23

நிலைகளை உணர்கிறோம். தொட்டுணர்ச்சி மூலம் அறிகிறோம். வாய்மூலம் சுவையை அறிகிறோம். கண்கள் மூலம் காண்கிறோம். மூக்கின் மூலம் மணம். நாற்றங்களை அறிகிறோம். செவி (காதுகள்) மூலம் கேட்கிறோம். இந்த ஐம்பொறிகள் மூலம் அறிதல் மூளை க்குச் சென்று அப்பொருளைப் பற்றிய அறிவைப் பெறுகிறோம். ஐம்புலன் அறிவையெல்லாம் நமது மூளையும் பகுத்தறிவும் ஒழுங்குமுறைப்படுத்தி நம்மை செயல்படுத்துகிறது. செயலில் ஈடுபடுத்துகிறது. இவைகளையெல்லாம் வைத்தியர்கள் உடற்கூறு விஞ்ஞானிகள் விரிவுபடுத்திக் கூறுகிறார்கள். நத்துவஞானிகள் தத்துவார்த்த முறையில் ஐம்பொறிகளின் பல்வேறு செயல்களை விளக்கிக் கூறுகிறார்கள். அறிவின் நந்துவத்தைப் பற்றி நமது தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் மிகவும் விரிவான முறையில் ஆய்வு செய்து விளக்கி இருக்கிறார்கள்.

இந்த ஐம்பொறி உணர்வுகளை நமது பகுத்தறிவின் மூலம் நமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். அதை முழுங்கு முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். நாம் அம்பொறிகளை ஆள வேண்டுமேயல்லாது ஐம்பொறிகள் நம்மை ஆாக்கூடாது. மனிதன் தனது ஐம்பொறிகள் மீது ஆட்சி கொண்டால் உலகில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்கள் மறைந்துவிடும், ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவையெல்லாம் அம்பொறிகள் சம்பந்தப்பட்ட வைகளேயாகும்.

மூன்று குரங்கு பொம் ைம க ள் மேஜை மீது வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று கண்களைப் பொத்திக் கொண்டிருக்கிறது. ஒன்று காது களைப் பொத்திக் கொண்டிருக்கிறது. மூன்றாவது வாயைப் பொத்தி க் கொண்டிருந்கிறது. நல்லனவற்றையே பார், நல்லனவற்றையே கேள், நல்லனவற்றையே பேசு, அல்லனவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்று பொருள்பட அந்தப் பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.