பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் - - 29

இயற்கை இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கையில் காணும் அத்தனை பொருள்களும் இடைவிடாது செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன . இடை விடாது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன.

மனிதனும் இடைவிமாமல் ஒய்வு ஒழிவின்றி வேலை செய்ய வேண்டும், தொழில் செய்ய வேண்டும், தொழில் செய்ய வேண்டும் என்பது பாரதி வழி.

"ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்”

என்று பாரதி கூறுகிறார். ஒயுதல் இல்லை, தலைசாயுதலும் இல்லை, எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார்.

சோர்வைப் போக்க வேண்டும். சோம்பலைப் போக்க வேண்டும். எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். என்பதற்கே பாரதி ஒய்தலோழி என்று கூறியுள்ளார் என்பதை உணர்க. 'ஓடிவிளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா” என்பதை மறக்காதே.

12. ஒளடதம் குறை

ஒளடதம் என்றால் மருந்து. ஒளடதம் குறை என்றால் மருந்து களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பொருளாகும்.

மனித வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியம் அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நல்ல உணவும், நல்ல தண்ணிரும், நல்ல காற்றும், உடற் பயிற்சியும், மனப்பயிற்சியும் தேவை. சிறு சிறு ஆரோக்கியக் குறைவுகளுக் கெல்லாம் கண்ட கண்ட மருந்துகளைச் சாப்பிடுவது நல்லதல்ல.

நமது ஆகாரத்திலேயே நாம் உட்கொள்ளும் காய்கறிகள், மிளகு, சீரகம், வெள்ளைப் பூண்டு, வெங்காயம், சுக்கு, இஞ்சி, மஞ்சள் முதலிய பொருள்களும் கீரை வகைகளும் சிறந்த