பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாரதியின்-புதிய-ஆத்திசூடி_0

மருந்துவப் பொருள்களாகும். அவையே பெரும்பாலான சிறு நோய்களை சிறு உபாதைகளைத் தடுக்கும் சக்தி கொண்டவை. அதற்குமேல் அதிகமாக செயற்கை மருந்துளைத் தேடுவது நல்லதல்ல. கூடுமான அளவில் மருந்துகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று ஒரு பழமொழியும் உண்டு.

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுனின்”

எனபது வள்ளுவர் வாக்கு.

நாம் முன்பு அருந்திய உணவு முழுமையாக செரித்த பின்னர், தக்க அளவில் மீண்டும் உணவு எடுத்துக் கொண்டால் மருந்தே தேவைப்படாது என்பது அக்குறளின் பொருளாகும்.

வயிற்றில் பாதி உணவு, மறுபாதியில் பாதி தண்ணிர், மீதம் காற்று என்று இருந்தால் நோயும் வராது, மருந்தும்

வேண்டுவதில்லை என்று வள்ளலார் கூறுகிறார்.

அதனால் தான் நல்ல உணவு நல்ல தண்ணிர், போதுமான அளவு தேவையான அளவில் சாப்பிட வேண்டும் என்பது அவசியம். நாம் துறவிகள் அல்ல. செயலூக்கத்துடன் செயல்பட வேண்டியவர்கள். ஓயாமல் தொழில் செய்ய வேண்டியவர்கள். எந்த வேலை செய்தாலும் அந்தந்த வேலைகளைச் செய்வதற்கு போதுமான உடல்வலிமை வேண்டும். மனவலிமை வேண்டும். அதற்குத் தேவையான உணவும் பயிற்சியும் அவசியமாகும், அதே சமயத்தில் நமது உடல் ஆரேதக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நோய் வந்தாலும் அதை எதிர்த்து எதிர்ப்பு சக்தியை நமது உடலில்

உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

நமது உடம்பு, இயற்கையின் பகுதி. அது பஞ்சபூத சக்திகளின் பல்வேறுபட்ட சேர்க்கையினால் ஆனது. அந்த சேர்க்கையின் சமநிலை வேறுபாட்டினால், மாற்றங்களினால்