பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 37

-

'வில்லினை எடடா - கையில் வில்லினை எடடா - அந்தப்

புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா"

என்று பாரதி வில்லினை எடுத்து புல்லியர் (கீழோர்) கூட்டத்தை ஒழித்துக் கட்டுமாறு கண்ணன் பார்த்தனுக்குக் கூறுவதாக நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

பாஞ்சாலி சபதத்தில் பாரதி : சூதில் பணயமான பாஞ்சாலியை துச்சாதனன் அத்தினாபுரத்துக் தெரு வழியே இழுத்துக் கொண்டு வந்த போது அந்தக் கீழோன் செய்த செய்கையைக் கண்டு சீறி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து சாடுகிறார்.

அன்னை பாஞ்சாலியை இழுத்துக் கொண்டு வரும் விலங்கைப் போன்ற இளவரசனைப் பிடித்து அவனை மிதித்து தராதலத்தில் போக்கி பாஞ்சாலியையும் விடுவித்து அவளை அந்தப்புறத்திலே சேர்க்காமல் நெட்டை மரங்கள் என நின்றார்கள். பெட்டைப் புலம்பல் புலம்பினர் என்று பாரதி கோபத்தோடு கூறுகிறார்.

இதை நினைத்தும், விடுதலைப் போராட்டத்தையும் மனதில் கொண்டும் பாரதி தனது புதிய ஆத்திசூடியில் “கீழோர்க்கஞ்சேல்” என்று வருங்காலத்தின் புதிய தலைமுறையைக் கேட்டுக் சொள்கிறார்.

17. குன்றென நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில். குன்றென நிமிர்ந்து நில். உறுதி குலையாது நிமிர்ந்து நில். எதற்கும் அஞ்சாது நிமிர்ந்து நில். ஆண்மையுடன் நிமிர்ந்து நில். ஏறு போல் நிமிர்ந்து நட என்றெல்லாம் பாரதி கூறுகிறார். இவை பாரதி க்கே உரிய தனிச்சிறப்பான சொற்களாகும்.

குன்று எதற்கும் அஞ்சாது. அசையாது. இடி, மழை, பேய்க்காற்று முதலிய எதற்கும் அஞ்சாமல், அசையாமல் எத்தனை