பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)ே அ.சீனிவாசன் 41

பின்னர் மனிதக்குழுக்கள் கூட்டு முயற்சிகள் எடுத்தே உற்பத் தி க் கருவிகளை உண்டாக்கியும் அவைகளைப் பயன்படுத்தியும் தங்களுக்குத் தேவையான பொருள்களை உண்டாக்கிக் கொண்டார்கள். நமது நாட்டில் குடும்ப அமைப்பே கூடித் தொழில் செய்யும் உற்பத்தியைப் பயன்படுத்தும் அமைப்பாக இருந்து வருகிறது.

மனிதன் தனது கூட்டு முயற்சியால் பல விலங்குகளைக் கட்டுப்படுத்தியும் பழக்கியும், அவைகளைத் தனக்கும் தனது உழைப்பிற்கும் உதவியாகப் பயன்படுத்திக் கொண்டான். ஆடு மாடுகளை மந்தை மந்தையாகப் பெருக்கி அவைகளிலிருந்து பால், இறைச்சி தோல், உரோமம் முதலியவைகளைப் பெற்று அவைகளைத் தங்கள் வாழ்க்கை வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டார்கள். ஆடு மாடுகள் தவிர குதிரை, கழுதை, யானை, ஒட்டகம், பன்றி, நாய் முதலிய விலங்குகளையும் பழக்கி தனது உழைப்புக்குப் பயன்படுத்திக் கொண்டான்.

மனிதன் கூட்டாகவே முயற்சி செய்து ஏராளமான நிலப்பரப்புகளை சாகுபடிக்குக் கொண்டு வந்து விவசாயத் தொழிலை வளர்த்தான். விவசாயத்திற்கு அவசியமான பல நீர்ப்பாசன நிலைகளை உருவாக்கினான். பெரிய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கல் வாய்களை, கிணறுகளை, கூட்டுமுயற்சியால் வெட்டி சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டான். o

மனிதன் தனது கூட்டு முயற்சியால் வீடுகளைக் கட்டினான், ஊர்களை, நகரங்களை உண்டாக்கினான். கோவில்களையும் கலைக் கூடங்களையும் நிர்மாணித் தான். சாலைகளை அமைத் தான். நீர்நிலைகளை நிர்மாணித்தான். கல்வி நிலையங்களை உண்டாக்கினான். பல தொழில்களை, எண்ணற்ற பல தொழிற் கூடங்களையும் உண்டாக்கினான்.

மனிதன் தனது கூட்டு முயற்சியால் தனக்குத் தேவையான உணவு, உடை, வீடு, கல்வி, பொழுது போக்குச் சாதனங்கள், விளையாட்டு வசதிகள் முதலியவைகளை உண்டாக்கிக் கொண்டான்.