பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 51

“மேலோர்கள் வெஞ்சிறையில் விழ்ந்து கிடப்பதும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?”

என்று அன்னிய ஆட்சியின் கொடுமையில் நிலவியிருந்த நிலையைப் பாரதி கூறுகிறார்.

“பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ”

என்று அன்னிய ஆட்சியின் கொள்ளைக் கொடுமையைப் பற்றி பாரதி குறிப்பிட்டுக் கூறுகிறார்.

இன்னும் ஆதிக்கக்காரர்கள் சாதாரண மக்கள் மீது நடத்தும் கொடுமைகள், மேல்சாதிக்காரர் என்றும் பெயர் வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது நடத்தும் சாதிக் கொடுமைகள் மற்றும் பெண்கள், குழந்தைகள், சாதாரண உழைக்கும் மக்கள் முதலிய சமுதாயத்தில் இன்று பலவீனமாக உள்ள மக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் முதலிய கொடுமைகளை எதிர்த்து நிற்க வேண்டியது நமது கடமையாகும்.

“சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்” என்றும்

“பொய்மைச் சாதி வகுப்பினை யெல்லாம், தகரென்று கொட்டு முரசே” = என்றும் பாரதி முரசு கொட்டுகிறார். “பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”

என்று பாப்பாவிடம் பாரதி கூறுகிறார்.

"கொடுமையை எதிர்த்து நில்” என்று பாரதி கூறும் போது வெறும் மனிதாபிமான முறையில் மட்டும் அவர் அதைக்