பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) அ.சீனிவாசன் 63

அந்த முறையில் இந்திய சமுதாயம் பிரமாண்டமான அளவில் படிப்படியாக இந்திய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உற்பத்தி சக்திகளை வளர்த்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் விழுங்கி, செரித்து அதை உரமாக்கி வளர்ந்துள்ளது. எத்தனையோ அரக்கர்களை வல்லமைமிக்க தடை பூதங்களையும் விழுங்கி முன்னுக்கு வந்திருக்கிறது. கடைசியில் வந்த பகாசூர பூதமான ஆங்கில அன்னிய ஆட்சியையும் விழுங்கி விடுதலையைப் பெற்றிருக்கிறது.

விடுதலை பெற்றபின், பொருளாதாரத் துறையில் அரசியல் துறையில், கல்வித் துறையில், விஞ்ஞானத் துறையில், உற்பத்தித் துறையில் பெருமுன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பல மாற்றங்களையும் கண்டிருக்கிறது. இன்னும் பல வரலாற்றுக் க. மைகளும் பாக்கி உள்ளன.

இந்தத் திசை வழியில் பாரத நாட்டின் நீண்ட வரலாறு களையும் வரலாற்று விவரங்களையும் எல்லாம் கற்று அவைகளில் தேர்ச்சி கொள்ள வேண்டும். பாரதியின் சரித்திரத் தேர்ச்சி கொள் வன்னும் ஆணையை நிறைவேற்ற வேண்டும்.

26. சாவதற்கு அஞ்சேல்

அச்சம் கூடாது. பயம் கூடாது: எத்தனை துன்பம் வந்தாலும் அஞ்சேல், அண்டம் சிதறினாலும் அஞ்சாதே.

"யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம் துணிந்து நில், தீயவைகளை எதிர்த்து நில்”

என்று பாரதி சதா நம்மை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

மனிதன் பிறந்த போதே சாவது என்பது நிச்சயம், அதற்கு பந்து கீழ்நிலைக்குப் போய்விடக் கூடாது. கோழையாகி MI க்கூடாது அச்சம் தவிர் என்பதே பாரதியின் புதிய ஆத்திசூடியின் தொடக்கமாகும்.