பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

-

32. சேர்க்கை அழியேல்

சேர்க்கை என்பது சேர்ந்து வாழுதல், நட்புடன் இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், சேர்ந்து நின்றும் கூட்டாகப் பணி ஆற்றலாகும். இந்த சேர்க்கைக்கு நாம் ஊறு விளைவிக்கக் கூடாது.

ஊருடன் கூடிவாழ் என்பது பழையசொல். இத்தகைய கூட்டு வாழ்க் கை யை அழித்து விடக் கூடாது. அத்துடன் மற்றவர்களுடைய நட்பையும் சேர்க்கையையும் உலை வைத்து அழித்து விடக் கூடாது.

மனிதனுக்கு நட்பு என்பது ஒரு நல்ல பண்பாகும். அத்தகைய நட்புகளை வளர்க்க வேண்டும். சிலர் நல்ல நண்பர்களுக்கிடையிலும் பகையை உண்டாக்கிக் கெடுத்து விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ள சேர்க்கையைப் பிரித்து சின்னபின்னமாக்கி விடுகிறார்கள். ஊரை இரண்டாக்கி விடுகிறார்கள். மத ஒற்றுமையை நல்லிணக்கத்தை, சாதி ஒற்றுமையை நல்லிணக்கத்தை குலைத்து சண்டைகளை உண்டாக்கி விடுகிறார்கள். சிலர் நாடுகளுக்கு இடையில் பகையை உண்டாக்கி விடுகிறார்கள். இவை யெல்லாம் சுயநலமிகளின் சூழ்ச்சிகளும் விளையாட்டுகளுமாகும்.

இத்தகைய சூழ்ச்சிகளுக்கும், சூதாட்ட விளையாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மனிதர்களுக்கு இடையில் உள்ள சேர்க்கையை குடும்பத்தில் உள்ள சேர்க்கையை ஊரில், நாட்டில் உள்ள மக்களின் சேர்க்கையை உலக நாடுகளுக்கு இடையில் உள்ள நல்லெண்ணங்களின் சேர்க்கையை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

33. சைகையிற் பொருளுணர்

நாம் பல நல்ல காரியங்களைச் செய்யும் போது அவைகளைச் சொல்லாமலேயே செய்ய வேண்டும். அச்செயல்களைச் செய்வதற்கு அடையாளம் காட்டினால் போதும் அதைச் செய்து முடிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.