பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாதியின்-புதிய-ஆத்திசூடி-9

சைகைகளைப் பயன்படுத்துகிறோம். அவைகள் அந்தப் போக்குவரத்து சாதனங்களை இயக்குவதற்கு மிகவும் அவசியமானதாகும். அவைகளை நாம் நன்கு கற்று அவைகளின் பொருளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

34. சொல்வது தெளிந்து சொல்

நாம் பேசுவது தெளிவாகப் பேச வேண்டும். பொருள்ப பேச வேண்டும். நாம் என்ன பேசுகிறோம் எதைப் பேசுகிறோம்

எப்படிப் பேசுகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு பேச வேண்டும், சொல்ல வேண்டும்.

கற்கக் கசடற என்பது வள்ளுவர் வாக்கு. எதையும் சந்தேகமின்றிக் கற்றுத் தெளிய வேண்டும். அப்போதுதான் வாக்கிலே தெளிவுண்டாகும். நாம் சொல்வதைத் தெளிவுபடச் சொல்ல முடியும்.

சொல்வன்மை பற்றி வள்ளுவர் மிக அழகாகக் கூறுகிறார்.

'திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளும் அதனினு உங்கில் ’’

என்பது குறள் . ஒன்றை நாம் சொல்லும் போது அச்சொல்லின் திறன். கேட்போரின் திறன் அறிந்து சொல்ல வேண்டும். அச்சொல்லில் அறமும் பொருளும் விளங்க வேண்டும்.

ஒன்றை மற்றவர்களுக்கு நாம் சொல்ல விரும்பினால் அவைகளைத் தெளிவுபடச் சொல்ல வேண்டும். நாம் அச்சொல்லின் அறனையும் பொருளையும் தெரிந்து, தெளிந்து, சொல்ல வேண்டும். கேட்பவர்கள் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி சொல்ல வேண்டும்.

35. சோதிடந்தனை யிகழ்

சோதிடம் வேதக் கணிதத்தின் பகுதியாக ஆராயப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், பூமி, இதர கிரகங்கள் சுடர்கள் முதலியவற்றையும், அவைகளின் அசைவையும் செயல்பாடுகளையும் ஆதாரமாகக் கொண்டு பஞ்சாங்க சாஸ்திரம்