பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-அ.சீனிவாசன் _ 75

வேதகாலம் தொட்டு நமது நாட்டின் ஆராயப்பட்டு வந்திருக்கிறது. அதை வைத்து யுகம், ஆண்டு (அறுபது ஆண்டுகள்) மாதம், வாரம், நாள், நாழிகை, வினாடி, கனம் முதலிய காலக்கணிப்புகளும் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

நமது நாட்டின் பஞ்சாகமும் காலக் கணிதமும் மிகவும் பிரபலமானதாகும். சோதிடக் கலை காலக்கணிதம் பற்றிய ஏராளமான நூல்களும் நமது நாட்டில் பண்டய காலத்தில் பெருகிவளர்ந்துள்ளன.

அவைகளின் ஆதார சாஸ்திரங்களை வைத்து அவைகளை படித்துஆய்வு செய்தும் வளர்க்கப்பட வேண்டும். அவைகள் இடைக்காலத்தில் பல்வாறு சேதப்பட்டு விட்டன.

பலவகையான போலிச்சுவடிகளும் புகுந்து விட்டன. அதனால் பல வகை ஊகங்களும் ஆரூடங்களும் புகுந்து பல வகை மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து விட்டன. அதையே பாரதி சோதிடந்தனை இகழ் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்று சோதிடம், காலக் கணிதம், வேதக் கணிதங்கள் சூரியன், சந்திரன், பூமி, கிரகங்களின் அசைவுகள் செயல்பாடுகள் பற்றிய வானவியல், இவைகளில் பண்டய இந்தியாவின் கண்டுபிடிப்புகள், சாதனைகள் பற்றிய பல பழைய நூல்களும் சாத்திரங்களும் ஆராயப்பட் வேண்டும். அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

சோதிடக் கணிப்புகளில் காணப்படும் பல பாதகமான வினைவுகளுக்குப் பல பரிகாரங்களும் கூறப்படுகின்றன.

மேலும் விதி, வினை முதலியவைகளினால் விளையும் தீய விளைவுகளுக்கு மதியாலும், வல்லமையாலும் பரிகாரம் காணப்படுகின்றன.

எனவே கிரக பலன்களை கணிப்பதோடு நிற்காமல், அவைகளில் சில வகை மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல், அவைகளுக்கு பரிகாரம் கண்டு சமாளிக்கும் அறிவாற்றலையும் வல்லமையையும் பெற வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும்.