பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0_அ.சீனிவாசன் 85

உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டும் எனவும் யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன் என வும் மண்ணி னும் காற்றினும் வானினும் எனக் குப் பகைமையில்லை என்றும் மண் மீதுள்ள மக்கள் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள் யாவும் என் வினையால் இடும்பைத் தீர்ந்து இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந் தி டச் செய்தல் வேண்டும் என்றும், அனைத்து உயிரினங்களும் இன்பமுடன் இணைந்து நேயத்துடன் வாழ பாரதியின் கருத்துக்கள் உயர்ந்த நிலையிலான மனித நேயத்தை வெளிப்படுத்துவதாகும்.

பாரதி வழியில் ஞேயம் காத்தல் செய்து உலகில் அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்க ஆவன செய்ய நமது குழந்தைகளுக்கு வழிகாட்டுவோமாக.

42. தன்மையிழவேல்

தன்மையென்றால் மனிதத்தன்மை நல்ல இயல்பு நாம் மனிதத் தன்மைகளையும் நல்ல இயல்புகளையும் இழந்து விடக் கூடாது. மனிதத்தன்மையோடு இருப்பதற்கு முதல் நிபந்தனை மனிதன் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

சாதி, மதங்களைப் பாரோம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் மனித உணர்வு இருக்க வேண்டும்.

ஞானம், உயர்ந்த மானம், தீரம், படை வீரம், நெஞ்சில் ஈரம் நன்மை உடல் வன்மை, செல்வப்பன்மை மறத்தன்மை (வீரம்) முதலிய மனிதத்தன்மைகளை நல்ல இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆக்கம், தொழில் ஊக்கம், புயவிக்கம், உயர்நோக்கம், வண்மை உளத்திண்மை, மனத்திண்மை மதிநுண்மை, உண்மை, யாகம், தவவேகம், தனியோகம், பல போகம், ஆகம், அருள் முதலிய மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மனிதத் தன்மையிழவேல் என்று கூறும் பாரதி, இன்னல்கள் வரும் போது அதற்கு அஞ்சமாட்டோம், ஏழையராகி இனி இந்த