பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aoo பாரதியும் பாரதிதாசனும் "சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னிற் செழித்திடும் வையம்' என்பது அவருடைய கொள்கையாகும். ஆகவே, பறையருக்கும் தீயருக்கும் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கு மறவருக்கும் விடுதலை ஏழையென்றும் அடிமையென் றும் எவனுமில்லை சாதியில் இழிவுகொண்ட மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே" என்றும், "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியரைத் துரையென்ற காலமும் போச்சே' என்றும், சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் திே உயர்ந்த மதி கல்வி அன்பு கிறைய வுடையவர்கள் மேலோர்’ என்றும் ஞானமுழக்கம் செய்கிறார். பெண் விடுதலை மனித இனத்தின் நேர்பர்தியாகவுள்ள பெண்ணினம் ஆணினத்துக்கு அடிமைப்பட்டுக் இ ட ப் ப ைத ப் பாரதியாரால் பொறுத்துக்கொள்ள் முடியவில்லை. சமுதாயத்தின் நிலையான இன்ப வாழ்க்கைக்குப் பெண் விடுதலை இன்றியமையாதது என்பதை உணர்ந்தார். 19. பாரதியார் கவிதைகள்; முரசு : 8 பக். 210. 20. பாரதியார் கவிதைகள்; விடுதலை : 1 பக். 37. 21. பாரதியார் கவிதைகள்: சுதந்திரப்பள்ளு : 1 பக் 58. 22. பாரதியார் கவிதைகள்; பாப்பாப்பாட்டு : 1.5 பக். 208.