பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo.carf. 197 பாரதியாருக்கு இன்ப வாழ்க்கை என்பது அவைகளோடு அமைந்துவிட்டதாகத் தெரியவில்லை. அவர் கண்ட கனவொன்று இன்ப வாழ்வுப் பட்டதாகத் தோன்றுகிறது. அதுயாது? "விட்டு விடுதலையாகி நிற்பாயிர்தச் சிட்டுக்குருவியைப் போலே எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை" என்று பறவை வாழ்வினைப் போற்றுகிறார். தேசிய ஒருமைப்பாடு பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் விடுதலைத் திறம் கெட்டலைந்த அன்றைய இந்தியச் சமுதாயத்தையே கண்டதாகக் கூறுவர். பாஞ்சாலி - பாரத அன்னையாகவும் துரியோதனன் - ஆங்கில ஆட்சியாளனாகவும் தருமன் - பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னருள் ஒருவனாகவும் வீமன் - விடுதலை வேட்கை கொண்ட ஒரு புரட்சி வீரனாகவும் பாரதியாரின் மனக்கண்ணில் தோன்றியுள்ளனர்." பாஞ்சாலி சபத்தில் பாரதப்போர் என்று குறிப் பிடப்படுவதெல்லாம். பாரதத்தின் விடுதலைப்போரையே என்பது தெள்ளத் தெளிவு. 'பாரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்” இந்த வரியில் பாரதியார் கட்டுவது இந்தியாவின் விடுதலைப் போரையே ஆகும். அ ப் போரி ல் ஆங்கிலேயர் 42. சாமுவேல்தாசன், பாரதி உள்ளம், பக். 104