பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பாரதியார்-ஒரு மக்கள் கவிஞர் "ஒரு கவிஞன் பிறக்கிறான்; உருவாக்கப்படு அதில்லை" என்பர். காலத்தின் தேவைக்கேற்பக் காலத்தின் இடையிடையே கவிஞர்கள் தமிழ்நாட்டில் தோன்றி வந்துள்ளனர். இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் காதலையும் போரையும் பாடிய கவிஞர்கள் வாழ்ந்தனர். இடைக்காலத்தில் சமயத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் பற்றிப்பாடிய புலவர்கள் திகழ்ந் தனர். இக்காலத்தே அறிவியலையும் மனித சமூகவியலை யும் பற்றிப் பாடும் நோக்குடைய கவிஞர்கள் மிகுந் துள்ளனர். காலந்தோறும் கவிஞர் பலர் விாழ்ந்தாலும் ஒரு சிலரே மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்து வன்றென்றும் வாழுகின்றார்கள். "ஆற்றுமணலை எண்ணி னாலும் எண்ணிவிடலாம். ஆனால் தமிழ்க் கவிஞர் வளுடைய தொகையை எண்ண முடியாது" என்பர். அம் முறையில் தமிழகத்தில் கவிஞர் தொகை பெருகி வந்திருப்பதற்குக் காரணம், தமிழ்நாடு கவிதைச் சுவை யில் காட்டும் ஆர்வமும் கவிஞர்களுக்கு அளிக்கும் சிறப்புமே ஆகும் எனலாம். கவிதைச் சுவையில் உயர்நாடு என்று மகாவி பாரதியாரும் குறிப்பிட்டுள்ளார். பிற்காலப் பாண்டியராட்சி தமிழகத்தில் வீழ்ச்சியுற்ற பிறகு நாயக்கராட்சி மலர்ந்தது. இக்கால கட்டத்தில் தோன்றிய புலவர்களை ஏற்றிப்போற்றிப் புரந்து நிற்கும் பொரசர்கள் இல்லை; சிற்றரசர்கள்கூடத் தாங்கள் நிலப் பகுதிகளைப் பகைவர் படையெடுப்பினின்றும் காத்துக்