பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. tarr. 9 "வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, கெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி பாரம் படைத்த தழிழ்நாடு" -செந்தமிழ் நாடு : 7 என்றும் வரும் பாடல்களில் பாரதியார் தமிழ்க் கவிஞர் மூவர்பாலுங் கொண்டிருந்த அளவிலா மதிப்புப் புலனா கின்றது. இவைபோலவே அமைந்துள்ள பாரதிதாசனின் தமிழ்ப்பற்றினைக் காண்போம். தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் தமிழுக்கு நிலவென்று பேர்-இன்பத் தமிழ்எங்கள் சமூகத்தின் விளைவுக்குநீர்! தமிழுக்கு மணமென்றுபேர்! இன்பத் தமிழ்எங்கள் வாழ்வுக்கு கிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்!-இன்பத் தமிழ்எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர்! -பாரதிதாசன் கவிதைகள் தமிழர்பற்றுப் பின்வரும் பகுதியால் விளக்கமுறு கின்றது. தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய்தடுத் தாலும்விடேன்! எமைகத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! -இசையமுது : தமிழன்