பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΙΙΟ பாரதியும் பாரதிதாசனும் கொள்வதிலேயே கவனஞ் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் தமிழகத்தில் அக்காலையில் நிகழ்ந்த முசுலீம் மன்னர் படையெடுப்புகள் நாட்டின் நிலையானதோர் அமைதியைக் குலைத்து நின்றன. எனவே ஆங்காங்கே வாழ்ந்த ஜமீன்தார்கள். நிலக்கிழார் கள், செல்வர்கள் ஆகியோர் ஆதரவை நாடிப் புலவர்கள் நிற்கவேண்டிய நிலை நேர்ந்தது. "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளே தம் தேவாரத்தில் குறிப்பிட் டிருப்பாரேயானால் அவருக்கும் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் நிலையைப்பற்றிக் கூறாமலே விளங்கிக் கொள்ளலாம். "நெல் கொண்டு போகுமட்டும் நில்லாய் நெடுஞ்சுவரே என்று கம்பர் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், கூழுக்குப் பாடினாள் ஒளவை என்றும் இடைக்கால இலக்கிய வரலாற்றுச் செய்திகளாகச் சிலர் குறிப்பர். கல்லாத ஒருவனை கற்றவன் என்றும், இறக்க இருக்கும் கட்டத்தில் உள்ள வீரன் ஒருவனை. நாட்டினை நன்கு ஆள்வாய் என்றும், பொல்லாத ஒருவனை நல்லான் என்றும் போர்முகத்தையே அறியாத ஒருவனைப் பு லி .ே ய று என்றும், சூம்பற்றோள் உடையவனை மல்லாரும் தோளுடையான் என்றும், வழங்காதவனை வள்ளல் என்றும் புகழ்ந்துங்கூட இல்லை என்று கையை விரித்துவிட்ட இடைக்கால வள்ளலையும் "இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்; யானும் இல்லாது ஏகின்றேனே" என்று நெஞ்சம் மாழ்கிய புலவரையும் காணலாம். கல்லாத வொருவனை நான் கற்றா யென்றேன் காடெறிய மறவனைகா டாள்வா யென்றேன் பொல்லாத ஒருவனை கானல்லா யென்றேன் போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்