பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M, cur. 113 நலமுற வாழவேண்டும் என்ற துடிப்பிலே அவர் աոգա பாடல்கள் பலவாகும். பாரதி பிறந்த காலத்திலே தமிழ்நாட்டு மக்களின் நிலை எவ்வாறிருந்தது? வாழ்வு எத்தகையதாக அமைந் |திருந்தது என்பதனைக் காணவேண்டும். "இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?" என்ற பழமொழி பன்னெடுங் காலமாய் வழங்கிவரும் இந்த அட்டிலே பாரதி தோன்றினார். தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களைப் பார்த்தார். அவர்தம் நிலையினைப் பின்வருமாறு வடிக்கின்றார். தேடிச் சோறு கிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமுற உழன்று-பிறர் வாடப்பல செயல்கள் செய்து -பாரதியார்; யோக சக்தி, 4 அழும் வாழ்க்கையினைப் பாரதி கண்டிக்கின்றார். _rணிய ஆட்சியைக் கண்டு அஞ்சி அடிமைபோல் வாழும் மக்களை இகழ்ச்சியோடு பார்க்கிறார். அவர்தம் இரங்கதி _ நிலையைப் பின்வருமாறு குறிக்கின்றார். சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம் பதைப்ப்ார் அப்பாக்கி கொண்டொருவன் - வெகு துரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பாலே வீடுசெல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து கிற்பார் Lur, Lurr.-& -