பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாரதியும் பாரதிதாசனும் எப்போதும் கை கட்டுவார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போ லேங்கி கடப்பார் (நெஞ்சு) -பாரதியார்; பாரத ஜனங்களின் தற்கால நிலைமை, ! இத்தகு பயம் மிகுந்த மனிதர்களைப் பார்த்து 'நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்று பாரதி பாடுகின்றார். முதலாவதாக அன்னியர் ஆட்சி நம்மை அடிமைப் படுத்தியதற்குரிய காரணத்தை ஆராய்கிறார். நமக்குள் ஒற்றுமையின்மையே அன்னியர் நம்மை அடிமைகொள்ள வைத்தது எனத் துணிகிறார். இதனைக் கவிச்சுவையொடு எவர் மனத்திலும் எளிதிற் பதியும்வண்ணம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் : கொஞ்சமோ பிரிவினைகள்-ஒரு கோடியென்றால் அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு நெடுநாளிரு வரும் பகைத்திருப்பார் -பாரதியார்; பாரத ஜனங்களின் தற்கால i - நிலைமை, 4 விட்டு நிலையே இதுவானால் நாட்டின் நிலையைச் சொல்லவும் rேண்டுமோ? அரசியல் அடிமைத்தனமே 'யன்றிப் பொருளாதாரச் சுதந்திரத்தினையும் இழந்து நிற்கும் மக்களை அவர் பாடுகிறார். கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணங்கள் இவையென்னும் அறிவு மில்லார் பஞ்சமோ பஞ்ச மென்றே-கிதம்