பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பா. o 118 பரிதவித் தேஉயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்றாரே-இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே என்று கூறி, அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே -பாரதியார் ; பாரத ஜனங்களின் தற்கால நிலைமை, ே என்று அவர்தம் அவலநிலையை எடுத்துரைக்கின்றார். அந்த அடிப்படை அச்சநிலையை அகற்ற எண்ணு கிறார் பாரதியார். எனவே அச்சமில்லை என்று கூறி ஒரு பண்ட்ாரம் பாட்டொன்று அகவல் நடையில் பாடுகிறார். அச்ச மில்லை, அழுங்குத லில்லை நடுங்குதலில்லை, காணுத லில்லை பாவமில்லை, பதுங்குத லில்லை எதுநேரினும் இடர்ப்பட மாட்டோம். அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம் -பாரதியார் ; விநாயகர் நான்மணிமாலை அகவல் என்று பாட ഞഖ8 ததோடு மட்டுமில்லை, உலகஉயிர்களை இழுத்துப் பறித்துச் செல்லும் காலனையே பார்த்துப் பின்வருமாறு கூறச் செய்தது.