பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாரதியும் பாரதிதாசனும் காலாஉனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் -பாரதியார் : காலனுக்குரைத்தல், பல்லவி அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்திலுளோரெல்லாம் எதிர்த்துகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதில்லையே. -பாரதியார் : ஞானப்பாடல்கள்-79 அச்சமில்லை என்று வீரத்துடன் பாரதி முழங்கு கின்றார். முதலாவதாக, மக்கள் நல்வாழ்வுபெற, அரசியல் விடுதலை பெறவேண்டும். அதனை எப்படிப் பெறுவது? அவர்கள் தம் முன்னோர் பெருமையினையும் அவர் வாழ்ந்த நாட்டின் சிறப்பினையும் அறிய வேண்டும். எனவே நாட்டுப்பற்று என்னும் விதையை மக்கள் மனத்தில் விதைக்க முற்படுகின்றார். எங்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிக்காடே-அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிங்காடே-அவர் சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து சிறந்தது மிக்காடே-இதை வந்தனை கூறி மனதி லிருத்தியென் வாயுற வாழ்த்தேனோ. -பாரதியார்; நாட்டு வணக்கம், இப்பாடலில் அவர் 'சிந்தையிலாயிரமெண்ணம் வளர்ந்து சிறந்தது மிந்நாடே என்ற தொடர் ஆழ்ந்து நோக்கத்