பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$searr, ፲1ሃ தக்கதாகும். வெள்ளையர்கள் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தளைப்பட்டு நம்மை அடிமைப்படுத்தி ஆள்கின்ற வல்லமை பெற்றவர் களாக இருந்தார்கள். எனவே தாய்க்கு வணக்கம்" என்னும் பொருள்படும் வந்தே மாதர'த்தினை நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்ந தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டில் ஒரு பாடல் பாடினார்: அந்தப் பாடலில் மக்கள் அனைவரும் தமக்குள் வேறுபாடின்றி ஒன்றுபட்டு வாழவேண்டுவதன் இன்றியமையாமையினைப் புலப்படுத் தினார். ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம் இத்தேசத்தி லெய்தின ராயின் வேதிய ராயினும்;ஒன்றே-அன்றி வேறு குலத்தின ராயினு மொன்றே என்று கூறி, அன்னிய ஆட்சியாளர்களைப் பார்த்து. ஆயிர முண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகலென்ன திே-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் -தம்முட் சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ என்று குறிப்பிட்டு மக்களனைவரையும் பார்த்து, ஒன்றுபட் டாலுண்டு வாழ்வு-கம்மில் ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே கன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்? என்று இடித்துரைத்து இறுதியில்,