பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 . aாரதியும் பாரதிதாசனும் எப்பதம் வாய்த்திடுமேனும்-கம்மில் யாவர்க்கு மந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் -பாரதியார் ; வந்தே மாதரம், 1,3,4,5 என்று சூளுரை கூறி மக்களை ஒன்றுபடுத்துகிறார். இந்த நாட்டில் மிகப் பழமையாக நிலைபெற்று நிற்கும் பொருள்கள்மேலும் பற்று தோன்றினால் மக்கட்கு நாட்டுப்ப்ற்றுத் தானே முகிழ்க்கும் என்று கண்டார் பாரதியார். எனவே இமயமலையையும் கங்கையாற்றை யும் புகழ்ந்து பாடினார். - மன்னு மிமயமலை யெங்கள் மலையே மாநில மீததுபோற் பிறிதிலையே! இன்னறு நீர்க் கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? -பாரதியார் : எங்கள் நாடு, ! இறைவன் ஒருவன். அவனுடிைய மக்கள் நாம். உலகு இன்பமயமானது என்று அறிவுறுத்துகின்றார் பாரதியார். ஒன்று பரம்பொருள் காமதன் மக்கள் உலகின்பக் கேணி -பாரதியார்; பாரத மாதா, ! மேலும் அவர் பாரதத்தாய் பழமையும் சிறப்பும் காங்குறப் பெற்றவள் என்பனைக் காவடிச் சிந்திலும் ஆறுமுக வடிவேலனே' என்ற மெட்டிலும் அமைத்துள்ள "எங்கள் தாய் என்னும் பாடலிலும் விளக்குகின்றாா.