பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M, tim'. 119 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள் தாய் -:சாரதியார் ; எங்கள்தாய், ! என்றும், முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனிற் சிந்தனை யொன் றுடையாள் - -பாரதியார் ; எங்கள் தாய், 2 என்றும் அவர் பாடியுள்ளமை காண்க. இவ்வாறு ஒன்றுபட்ட சிந்தையராய் விளங்குதற்கு ஆயத்தப்படுத்திய பாரதியார் அவர்களுக்குச் சுதந்திரத் றின் பெருமையினைக் கட்டுரைக்கின்றார். இப்பாட்டினை மக்கள் விரும்பிப் பாடி வீறு பெறவேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாகவே தில்லை வெளியிலே கலந்து விட்டாலவர் திரும்பியும் வருவாரோ! என்ற வர்ண மெட்டில் பாடியுள்ளார். விர சுதந்திரம் வேண்டிகின் றார்பின்னர் வேறொன்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? -பாரதியார்; சுதந்திரப் பெருமை, ! இவ்வாறு சுதந்திர தாகம் கொண்ட மக்கள் கிளர்ந்தெழு மொர்கள். அதனையும் பாடுகிறார் சாரதியார்.